சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட 114 ஆண்டுகள் பழமையானது.இந்த ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 734.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும்.
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக கண் கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது.