Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி…. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு….. அடுத்தடுத்த அதிரடியால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறிவரும் நிலையில், கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்த ஓபிஎஸ் தற்போது சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இந்த புதிய நிர்வாகிகள் தென் சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.வி சதீஷ் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்று கொண்டனர்.

அப்போது எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நல்லாட்சி அமைந்து அதிமுக கட்சியின் நிர்வாகிகள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் உண்மையாகவும், கடுமையாகவும்  உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். மேலும் தேவர் ஜெயந்தி விழாவில் 10 கிலோ மதிப்பிலான வெள்ளி கவசத்தை வழங்கி‌ ஓபிஎஸ் கெத்து காட்டிய நிலையில், இபிஸ்-க்கு அடுத்தடுத்த நெருக்கடியாக தற்போது புதிய நிர்வாகிகளை நியமித்து வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Categories

Tech |