Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்திய கொடூரம்…. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்…..!!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்  1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.‌பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்களால் அவற்றை எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

எனவே தெரு நாய்கள் கடித்தால் அதற்கு உணவு வைப்பவர்கள் தான் பொறுப்பாளர்கள் என்றும் அவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். தெரு நாய் கடி தொடர்பான வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. தெரு நாய்களுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையிலும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்தும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்த பொதுமக்களின் உதவியால் அந்த சிறுவன் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக ஆர்வலர்கள் கரூரில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் வீடுகள் வருவதால் நாய்களுக்கு இடமில்லாமல் போனதால்தான் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் நடப்பதாக சமூக ஆவலர்கள் சிலர் கூறியுள்ளனர்.

Categories

Tech |