தென்கொரிய தலைநகர் சியோலில் இவ்வருடத்துக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்களானது விமர்சியாக நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற இத்திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடி இருக்கின்றனர். கொண்டாட்டத்தின் போது ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதில் ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டனர். இக்கூட்டத்தில் சிக்கி பல பேர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரையிலும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தென்கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
இதை 935 என்டர்டெயின் மெண்ட் எனும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஹானின் பணிகளை கையாண்டு வந்துள்ளது. எங்களது நிறுவனத்தின் விலைமதிப்பு இல்லா குடும்ப உறுப்பினராக இருந்தவர் அவர். மேலும் வானில் நட்சத்திரம்போன்று மின்னியவர். அவரது மறைவால் துயரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். எப்போதுமே புன் சிரிப்புடன் எங்களை வரவேற்ககூடிய ஜி-ஹானை நாங்கள் இனிமேல் பார்க்கவே முடியாது என்பதனை எங்களால் நம்ப முடியவில்லை. அவரது இறுதிசடங்குகள் இன்று (நவம்பர் 1) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.