Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடடே! 40 வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் சந்தித்த பள்ளிப் பருவ நண்பர்கள்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி பருவ நாட்களை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதனையயடுத்து தற்போது மீண்டும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

அதாவது நல்லம்பள்ளி பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிபள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1981-82 ஆம் ஆண்டு காலகட்டத்தில்‌ 55 மாணவர்கள் 10-ம் வகுப்பு படித்துள்ளனர். இந்த மாணவர்கள் வேலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பல பகுதிகளுக்கு சென்ற நிலையில் பழைய மாணவர்களை மீண்டும் சந்திக்க விரும்பிய  ஒருவர் அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வீரமணி என்பவர் அனைவரையும் ஒரே இடத்தில் வரவழைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி முயற்சி மேற்கொண்டார்.

அவரின் முயற்சியின் பலனாக அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்து தங்களுடைய பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன் பின் அனைவருக்கும் அசைவ உணவு விருந்தாக வழங்கப்பட்டது. மேலும் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பிறகு ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். மேலும் கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக படித்த மாணவர்கள் ஒன்று கூடியதால் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று அவர்களை ஆர்வமுடன் பார்த்து மகிழ்தனர்.

Categories

Tech |