கோடீஸ்வரர் ஆகவேண்டும் எனும் நடுத்தர குடும்பத்தினரின் கனவை நிஜமாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளால் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மியூசுவல் பண்டுகளில் எஸ் பி வாயிலாக முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவெனில், இதற்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும். தினசரி வெறும் 20 ரூபாய் சேமித்தால் கோடீஸ்வரர் ஆகலாம். மியூச்சுவல் பண்டுகளில் தினசரி ரூபாய்.20 முதலீடு செய்து ரூபாய்.10 கோடி டெபாசிட் செய்யலாம்.
எனினும் இதனைச் செய்ய எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து சரியான திட்டமிடல் இருக்கவேண்டும். இது தொடர்பாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம். 20 வயதில் இருந்து நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால், ஒரு மாதத்தில் இத்தொகை 600 ரூபாயாகி விடும். மியூச்சுவல் பண்டுகளில் மாதந்தோறும் ரூபாய்.600 SIP செய்ய வேண்டும். இந்த முதலீட்டை 40 வருடங்கள் வரை செய்யவேண்டும். இந்த அடிப்படையில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் 15 % வருமானம் கிடைக்கும்.
அதாவது, 40 வருடங்களுக்கு பின் உங்களுக்கு மொத்தம் ரூபாய்.1.88 கோடி கிடைக்கும். இந்த 40 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அளவு ரூபாய்.28800 மட்டுமே ஆகும். ரூபாய்.600 SIP-யில் 20 % வருமானம் கிடைத்தால், 40 வருடங்களில் மொத்தம் ரூபாய்.10.21 கோடியை நீங்கள் குவிப்பீர்கள். மியூச்சுவல் பண்டுகள் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
இவற்றில் முதலீட்டாளர் தன் வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தைப் பெறுகிறார். இதில் மொத்தம் ஆகவும் முதலீடு செய்யலாம் (அ) முறையான முதலீட்டுத்திட்டம் (எஸ்ஐபி) வாயிலாக ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம். SIP-யிலுள்ள வசதி என்னவெனில், நீங்கள் மாதம் வெறும் ரூபாய்.100 மட்டுமே முதலீடு செய்தாலும் போதுமானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றில் உங்களது முதலீட்டை அதிகரிக்கலாம். மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுகிறது.