உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது கொரோனா பரவல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே நிறுவனத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதோடு கொரோனா பரவலின் காரணமாக கூட்டம் கூட்டமாக ஊழியர்கள் சொந்த ஊருக்கும் திரும்புகின்றனர். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐ போன் 14 செல்போனை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. மேலும் பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் தொழிற்சாலைகள் சென்னையிலும் இயங்கி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.