பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும்.
அவ்வாறு பெறவில்லை என்றால் முதல் இரு இடங்களை பெற்றவர்கள் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவார். அதன்படி நேற்று முன்தினம் இரண்டாவது சுற்றுதேர்தல் நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது இதில் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பதிவான வாக்குகளில் 99 சதவிகிதம் வாக்குகள் எண்ணபட்ட நிலையில் லூலா 50.9 சதவீத வாக்குகளும் பொல்சோனோரா 49.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக ஆட்சியில் இருந்த வலதுசாரி தலைவரான பொல்சோனோராவை தோற்கடித்து லூலா வெற்றி பெற்றுள்ளார் இதனை அடுத்து அவர் மூன்றாவது முறையாக பிரேசிலில் அதிபராகியுள்ளார்.
இதற்கு முன் அவர் கடந்த 2003 ஆம் வருடம் முதல் 2010 ஆம் வருடம் வரை தொடர்ந்து இரண்டு முறை அதிபராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் 1985இல் பிரேசில் ஜனநாயகத்திற்கு திரும்பியதிலிருந்து பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தது இதுவே முதல் தடவை ஆகும். கருக்கலைப்பு மற்றும் ஓரின செயற்கையாளர்கள் பற்றிய சர்ச்சை கூறிய கருத்துக்கள், கொரோனா தொற்றை கையாண்ட விதம், அமேசான் மலைக்காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் காரணமாக போல்சோனோரா ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி இருப்பதாகவும் இதுவே அவரது தோல்விக்கு காரணம் எனவும் அரசியல் நோக்கங்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்று பிரேசிலில் புதிய அதிபராக தேர்வு செய்கின்ற லூலாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.