இலங்கை யாழ்ப்பாணம் – பருத்தித் துறை கடற்பரப்பில் சுழல் காற்று ஒன்று கடல் நீரை உறிஞ்சி சல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடல் நீர் ஆனது சுழல் போல தோன்றி பிறகு வானத்தை நோக்கி செல்கிறது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கீழே இறங்கி வந்து கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்விற்கு ரொனாடா என்று பெயர்.
இது ஒரு வகை சுழல் காற்று ஆகும். சுழல் காற்று என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்க கூடிய முகில் ஒன்றின் உட்பகுதியில் இருந்து தொடங்கி நில மட்டம் வரை நீண்டு வேகத்தோடு சுழல்கின்ற வளிநிரல் ஆகும். இது ஒரு சிறிய அளவிலான சூறாவளி எனப்படுகிறது. ஆனால் இது சூறாவளியை விட பார்க்க பயங்கரமானது.
https://youtu.be/zd5VbggnwZQ