Categories
உலக செய்திகள்

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதி…!!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்து விட்டனர் வேறு சிலர் இணையவில்லை அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அவர்களை எப்படி இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அந்த சமயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும். மேலும் கடந்த 1964 ஆம் வருடம் சிறிமா பண்டாரநாயக்க லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி மலையக தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு திரும்பி இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இலங்கையிலே தங்கி இருக்கின்றனர் மலையக தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகின்றது.

மேலும் அவர்களுக்கு நிலம் வழங்குகிறது மற்ற குழுக்களை போல் அவர்களும் சொந்த நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என நினைக்கின்றோம் மலையக தமிழர்களின் குழந்தைகள் படித்து முடித்த பின் அந்த பகுதியை விட்டு வெளியேறுவதால் மலையக பொருளாதார பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் மலையக தமிழர்கள் சிங்களர்கள் முஸ்லிம்கள் போன்றோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |