தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் – அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். வெள்ளப் பாதிப்புகளை உடனே அகற்ற வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து, உணவு, போர்வை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். சுரங்க பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை, மோட்டர்கள் கொண்டு உடனே அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.