தற்போது உள்ள காலகட்டத்தில் ஷாப்பிங் என்றாலே அது ஆன்லைனில் தான். ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், ஃப்லிப்கார்ட் மீசோ என பல ஆப்கள் உள்ளது. இதில் ஆடைகளுக்கு மட்டுமில்லாமல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்கள் முதல் பர்னிச்சர்ஸ் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் தான் தற்போது ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆர்டர்களை வாலிபர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்திருந்த நேரத்தில் ,தற்போது பாட்டி தாத்தா குழந்தைகள் வரை அனைவருமே ஆன்லைனில் பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து பிளிப்காடில் ரூ.500க்கும் குறைவாக பொருட்களை வாங்கும் நபர்களுக்கு ரூ.40 வரை டெலிவரி சார்ஜ் வழங்கப்படுகிறது.
ரூ.500க்கும் அதிகமாக விலை இருந்தால் டெலிவரி சார்ஜ் செலுத்த தேவையில்லை. அதுவும் நீங்கள் Flipkart Plus இல் சேர்ந்து கொண்டாலும் டெலிவரி சார்ஜ் கிடையாது. இந்நிலையில் flipkart புதிய சார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கேஷ் ஆன் டெலிவரி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைக்கும் வகையில் புதிதாக Handling fee வசூலிக்க பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. பிளிப்கார்ட்டில் போர்களை வாங்கிவிட்டு கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்தால் உங்களுக்கு “COD” என்ற ஆப்ஷனை தேர்வு செய்திருப்பதால் கூடுதலாக ரூ.5 கொடுக்க வேண்டும், ஆன்லைனில் பணம் செலுத்தினால் நீங்கள் இதை தவிர்க்கலாம் என்று மெசேஜ் காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.