Categories
தேசிய செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 2 மணி நேரமா செம டிராபிக்…? வாகன ஓட்டிகள் தவிப்பு…!!!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை அதிலும் குறிப்பாக அண்ணா சாலை, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு போன்ற பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொது போக்குவரத்தை வழக்கமாக பயன்படுத்துபவரும் மழையின் காரணமாக பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர் இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து லக்ஷ்மன் ஸ்ருதி வரையில் வரிசை கட்டி வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகின்றது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த வழியில் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னையின் பிரதான சாலைகளில் கடுமையான நெரிசல் காணப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவல் படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் அரக்கோணம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், உத்திரமேரூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.  மேலும் கிண்டி பொன்னேரி ஊத்துக்கோட்டை வாலாஜாபேட்டை போன்ற பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |