Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.. பயணங்கள் செல்லவேண்டி இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். கடமையில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். அந்நிய தேசப் பயணம் செல்ல வேண்டி இருக்கும். நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும் இன்று கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

மன தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் தொடர்ந்து  நடக்கும். இன்று மாணவச் செல்வங்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் கல்வியில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இன்று பொறுமையையும் மன அமைதியும் வளர்த்துக்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் வெற்றியை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |