சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும், கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள். உறவினர்கள் இடையே சுமுக உறவு இருந்தாலும், அவர்களால் கிடைக்கும் உதவி கொஞ்சம் தாமதமாக வந்து சேரும்.
மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களைப் படியுங்கள் நிதானத்தை கடைபிடியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று கூடுமானவரை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களைப் படியுங்கள், படித்த பாடம் உங்களுக்கு உடனடியாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இன்று மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும், அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்