கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதனால் கொடுக்கல்-வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள்.ஆன்மிகம் பற்றிய சிந்தனை உருவாகும், இன்று எதிலும் மிகவும் கவனமாகவே ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்பது, தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள் படித்ததை எழுதிப் பாருங்கள். தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் அனைத்து விஷயத்தையும் நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்,
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்