உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகின்றது.அது மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் 15 gp டிரைவ் சேமிப்பை 1 டிபியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது எப்போது நடைமுறையில் வரும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் தற்போது வெளியாகி உள்ள செய்தி கூகுள் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.