மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்க கடுமையாக போராட வேண்டியிருக்கும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும், மாலை நேரம் நட்பு பகையாக கூடும். இன்று நெருக்கடியான நேரத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும்.
எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். நண்பர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகவே பேசுங்கள். மாணவச் செல்வங்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு .மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
அது மட்டுமில்லை லக்ஷ்மி தேவியின் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்