Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்திய வீரர்களுக்கு…. ஆயுதமின்றி போர் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் மோதல் எதிரொலியாக இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆயுதம் இன்றி போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றபோது இருதரப்பு வீரர்களும் பலியாகினர். 1996 ஆம் வருடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது.

இதன் காரணமாக தற்காப்பு மற்றும் தாக்குதல் நடத்த பயிற்சி இன்று முதல் இந்திய வீரர்களுக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியானது 3 மாதம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |