மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று சுபகாரியப் பேச்சுக்கள் ஏற்படுத்துவதற்கான அறிகுறி தோன்றும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். இன்று வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதம், கோபத்தையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
வாழ்க்கைத்துணையுடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். விருந்தினர்களின் வருகை இருக்கும், அதனால் செலவு கொஞ்சம் கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். இன்று இரண்டு நிமிடம் தியானங்கள் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. படித்த பாடங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் லக்ஷ்மி தேவியை வழிபாடு செய்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு வெற்றியும் ஏற்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்