குஜராத் மோா்பி பகுதியில் மச்சுநதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்துவிழுந்தது. இந்நிலையில் பாலத்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நதிக்குள் விழுந்தனா். இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கையானது 134ஆக ஆனது. அத்துடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி யானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மோா்பி நதியில் தொங்குபாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமா் மோடி இன்று நேரில் பாா்வையிடுகிறார். அத்துடன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் குஜராத் தொங்குபாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு மாநில அரசு சார்பாக தலா ரூபய். 4 லட்சமும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய். 2 லட்சம் என ரூபாய். 6 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய். 50,000 வழங்கப்படும் எனவும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார். தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும், காணாமல்போன நபர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.