ஓம் சரவணபவ என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்.இம்மந்திரத்தை சொல்லி வாழ்வில் வளம் காணுங்கள்..!
முருகன் தேவர்களின் தலைவன் ஆவான். தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாகக் கருதப்படுகிறார், அவரே தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர். லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகபெருமான்.
அதனாலேயே அவருக்கு சுவாமிநாத சுவாமி என்ற பெயருண்டு. ஒருமுறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் ஓம் எனும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு நினைவூட்டும் படி கூறியபோது முருகன் தன்னை குருவாக ஏற்றுக் கொண்டால் பிரணவத்தை உபதேசிப்பதாக கூறினார்.
சிவனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு முருகனை மடியில் அமரவைத்து பிரணவ மந்திரமான ஓம் எனும் மந்திரத்தை முருகன் உபதேசிக்க பெற்றுக்கொண்டு நினைவுகூர்ந்தார். இச்சம்பவம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலையில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.
இந்த தளம் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. முருகனை வழிபட சிறந்த மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
ஓம் என்பது, பிரணவ குறிக்கிறது
ச என்பது, வசீகரிக்கும் சக்தி கொண்டது
ர என்பது, நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக் கூடியது
வ என்பது, துன்பம் வறுமை போன்றவற்றை நீக்க கூடியது.
ண என்பது, நம் வாழ்வில் பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது.
ப என்பது, ஈர்க்கும் ஆற்றலை கொண்டது.
வ என்பது, நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
இந்த மந்திரம் முருகனின் அருளைப் பெற சிறந்த மந்திரமாகும். வெள்ளிக்கிழமை நாளில் விரதமிருந்து இந்த மந்திரத்தை சொன்னால் நம் எண்ணங்கள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும், சரவணபவ என்கிற மந்திரத்தை 1008 முறை சொன்னால் அவருக்கு பொன் பொருள் சேர்ந்து வேண்டிய வண்ணம் நிறைவேறும்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பு, அது முருகனுக்கு பிடித்த நாளாகும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து இனிப்பான பாலில் குங்குமத்தை கலந்து முருகனுக்கு நெய்வேத்தியமாக படைத்தால் வாழ்வில் பல சிறப்புகளை அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.