Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நில அளவையர், வரைவாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…. பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

789 நிலஅளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை TNPSC நிரப்ப இருக்கிறது. இதற்குரிய எழுத்துத்தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் முதல்தாள் காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரையும், 2ஆம் தாள் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 2 பிரிவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை TNPSC தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தேர்வாளர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை அதில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டை பதிவிறக்க பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்

# TNPSC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளமான tnpsc.gov.in பக்கத்துக்கு செல்லவேண்டும்.

# “Candidates Corners” எனும் பகுதியில் உள்ள “Registered User” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவேண்டும்.

# பின் “Already Registered” எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

# அவற்றில் உங்கள் விண்ணப்பஎண் மற்றும் பிறந்ததேதியை குறிப்பிடவேண்டும்.

# உள் நுழைந்து Admit Card இணைப்பைக் கிளிக் செய்யவேண்டும்.

# அதன்பின் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து பதிவிறக்க வேண்டும்.

விண்ணப்பஎண் மற்றும் பிறந்ததேதியை உள்ளிடுவதன் வாயிலாக விண்ணப்பதாரரின் ஒருமுறை பதிவு (OTR டாஷ்போர்டு) என்ற முறையின் மூலம் மட்டுமே நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |