தமிழகத்தில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் பாஜக ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதோடு அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் திமுக முட்டுக்கட்டை போட்டதால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலையை தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக களம் இறக்கியது. இதேபோன்று வடமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஆர்.என் ரவியை தமிழகத்தின் ஆளுநராக பாஜக களமிறக்கியது.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை அடிக்கடி பரபரப்பு பேட்டியை கொடுத்து பீதியை கிளப்பி வருகிறார். அதோடு ஆளுநர் ரவியும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி பேசி வருகிறார். இப்படி இரண்டு ஐபிஎஸ் திமுகவுக்கு தலைவலியாக இருக்கும் பட்சத்தில், தற்போது மூன்றாவதாக புதிய ஐபிஎஸ் அதிகாரியை தமிழகத்திற்கு பாஜக அனுப்பியுள்ளது. அதாவது டெல்லியில் உள்துறை பணிகளில் கவனம் செலுத்தி வந்ததோடு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக பணிபுரிந்த விஜயகுமார் ஐபிஎஸ் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார்.
அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பதை விட பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜயகுமார் ஐபிஎஸ் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரி என்றும் கூறப்பட்டார். விஜயகுமார் ஐபிஎஸ் ஓய்வு பெற்ற பிறகு கூட அவருக்கு 6 வருடங்களாக தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்யப்பட்டதால், உள்துறை விவகாரங்களை கவனித்து வந்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உள்துறை விவகாரங்களில் பதவி ஆட்சிய ஒருவர் தமிழகத்திற்கு வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் திமுக மட்டும் இன்றி தமிழக உளவுத்துறையும் உஷார் நிலையில் இருக்கிறார்களாம். மேலும் தமிழகத்தில் பாஜக களம் இறக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளால் தற்போது திமுகவினர் தூக்கம் இழந்து தவிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.