Categories
மாநில செய்திகள்

அட இவரை என்ன சொல்றது!… “ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்”….. அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 62-யில் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தயவு செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும்.

அதாவது, உலகத்திலேயே பெரிய கரகாட்டம் கோஸ்டி எது என்ற காமெடி நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து அந்த கந்த சஷ்டி கவசம் படித்தவர்களை உலகத்தில் நீங்கள் தான் பார்த்திருப்பீர்கள். அந்த கோயில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததாக செய்திகள் வந்தது, தொலைக்காட்சியிலும்காண்பித்தார்கள். இதனை விட கோமாளி தனம் வேறு எதுவும் இருக்காது. எனவே அது போன்ற கருத்துக்களை கூறும் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்த்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |