உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, 04425619207,04425619208 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.