மெக்சிகோவில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்வியபடி நாய் உலா வந்தது.
அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விய படி இரவு நேரத்தில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. நாய் ஒன்று சடலத்தின் தலையை கவ்வி கொண்டு கறி என்று நினைத்து எங்கேயாவது இடம் கிடைக்காதா அதனை சாப்பிடுவதற்கு என்று சுற்றி திரிந்துள்ளது. இதனை விசாரித்த போது தெரிய வந்ததாவது, “மெக்சிகோவின் வடக்கே ஐகேட்டிகேஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குற்றம் நடந்த இடத்திலிருந்து மனித தலையை நாய் எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் துண்டிக்கப்பட்ட தலையானது மான்டே எஸ்கோபெடோ நகரத்திலுள்ள ஏடிஎம் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு அடுத்த தலை உன்னுடையது என்று எழுதப்பட்ட வாசகம் எச்சரிக்கை பலகையுடன் தொங்கவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் போதை பொருள் ஆசாமிகள் அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் இது போன்றவற்றை செய்து இருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.