ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 30-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்க முடியாமல் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் தேடுதல் பணிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி விவிஎன் பிரசன்ன குமார் கூறியதாவது. ஆற்றின் அடியில் சிலரது உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என கூறியுள்ளார். மேலும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் என பல குழுக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.