Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜமேஷா முபினுக்கு வெடி மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார்…? உபா சட்டத்தில் கைதானவரிடம் விசாரிக்க NIA திட்டம்…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கு என்ஐஏ விற்கு மாற்றப்பட்ட சூழலில் டிஐஜி வந்தனா எஸ் பி ஸ்ரீஜித் தலைமை இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவரது வாக்குமூலத்தை nia அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து இருக்கின்றனர். உயிரிழந்த முபின் கைதான அப்சல் கான் உதவியுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்து வெடி மருந்துகளை வாங்கி இருக்கின்றார். அவரது வீட்டிலிருந்து மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெடி மருந்துகள் பொருட்கள் வாங்க அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்ற சந்தேகம் nia அதிகாரிகளுக்கு எழுந்திருக்கின்றது. இந்த சூழலில் சர்வதேச கும்பலிடம் இருந்து பணம் பெறப்பட்டிருக்கிறதா அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய முடிவு எடுத்து இருக்கின்றனர். மேலும் முபின் கேரளா சிறையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் அசாருதீன் என்பவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதனால் விய்யூரில் உள்ள கேரளா சிறை அதிகாரிகளிடம் அசாருதீனை சந்தித்தவர்கள் யார் என nia அதிகாரிகள் பட்டியல் கேட்டிருக்கின்றார்கள். இந்த வழக்கில் கைதான ஆறு பேரை கோவை நகர தனிப்படையினர் காவலில் எடுத்து விசாரித்த பின் மீண்டும் சிறையில் அடைத்திருக்கின்றனர் மேலும் அவரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் கைதான ஆறு பேரை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க nia அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். இதற்கான கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முழு பின்னணி பற்றியும் nia விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |