Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கரடி நடமாட்டம்…. செல்போனில் புகைப்படம் எடுத்து கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்….!!

சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

இதனால் கரடி வந்த வழியாக திரும்பி சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுவதாவது, சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் வாகனங்கள் எதையும் அங்கே நிறுத்தக்கூடாது. ஏனென்றால் கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் எளிதில் தாக்கும் குணமுடையவை. தற்போது கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நடந்து கொள்வது அவசியமானது. அந்த விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |