Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து விசாரிக்க ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துகுள்ளானதில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த 23ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார்.

இதுவரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி படத்தின் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே விபத்து தொர்பாக நாளை காவல்துறை ஆணையர் அலுவலத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது .

Categories

Tech |