சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.
கடந்த மாதம் 147 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.