Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பா….. “இந்தியா அரையிறுதிக்கு போகும்”…. நம்பிக்கையுடன் சவுரவ் கங்குலி..!!

டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்..

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். அதன்பின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும்.. இதற்கிடையே டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு செல்லும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா வசதியாக தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். “இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்… இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடும் என்று நான் நம்புகிறேன்,” என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் கூறினார்.

இந்தியா தற்போது 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று குரூப் 2 இல் இரண்டாவது இடத்தில் உள்ளது, அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்கிறது. அதில் இந்தியா முதலாவதாக இன்று பங்களாதேஷ் அணியை  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 01:30 மணிக்கு எதிர்கொள்கிறது..

Categories

Tech |