Categories
தேசிய செய்திகள்

இனி இலவச தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம்…. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நேற்று முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள 3 இடங்களில் பெற்றுக்கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. டோக்கன்கள் பெற்றுக் கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் 1-2 மணி நேரங்களில் தரிசனம் செய்யலாம்.

Categories

Tech |