Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு உடனே பாருங்க….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, சிவகங்கை,ராமநாதபுரம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |