தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 5 வருடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அதற்கு 10 வருடங்களுக்கு மேலாக பணியிடம் தொடர் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்ட அந்த பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலி பணியிடங்களாக சில கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவரங்கள் அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டி இருப்பதால் இதில் கல்லூரி முதல்வர்கள் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உரிய காலத்திற்குள் அனுப்ப வேண்டும் எனவும் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு கல்லூரி முதல்வர்கள் தான் முழு பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.