Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…. ஆம் ஆத்மி எம்.பிக்கள் போராட்டம் …..!!

டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லி பாஜக இந்த கவரத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்றும் , ஆம் ஆத்மி கட்சி பாஜக தான் காரணம் என்றும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் மக்களவை வளாகம் முன்புள்ள காந்தி சிலையில் டெல்லி வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |