இஸ்ரேல் நாட்டிற்கும், பாங்காங்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.
டெல் அவிவ் மற்றும் பாங்காங் இடையே எல் அல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த விமானத்தின் பாத்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பிடிக்க முயன்ற போது தவறுதலாக நடுவானில் தீ பற்றியது. இதனால் அந்த விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயணி நிகோடின் போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் கழிவறையில் சிகரெட்டை புகைத்து கொண்டிருந்தபோது சிகரெட் துண்டுகளை ஒரு குப்பை கூடைக்குள் எறிந்தார். இதனால் குப்பை தொட்டிக்குள் கொட்டப்பட்டிருந்த பேப்பர்கள் தீ பற்றி புகை வெளிவர ஆரம்பித்தது. அப்போது கழிவறையில் இருந்த புகை கண்டறியும் கருவிகள் மூலம் விமான பணி பெண்களுக்கு உடனடியாக அவசர தகவல் கிடைத்தது.
அந்த தகவலை அடுத்து விமானப் குழுவினர் தீய விரைவாக அணைத்ததால். விமானம் திட்டமிட்டபடி பாங்காங்களில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும் விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் தாய்லாந்து காவல்துறையை ஈடுபடுத்த வேண்டாம் என்று விமானக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ஆனால் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள அந்த பயனை இஸ்ரேல் நாட்டிற்கு திரும்பியதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.