ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா ஆகும். 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்து இருப்பதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான 2 தினங்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதை டிரெயிலரில் பார்த்தோம்.
தற்போது இந்த படத்திற்காக சமந்தாவின் உழைப்பை படக் குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இவற்றில் சமந்தாவுக்கு ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யான்னிக் பென் பயிற்சிதரும் வீடியோ வெளியாகி படம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அண்மையில் சமந்தாவுக்கு தசை அழற்சி நோய் பாதிக்கப்பட்டதை கூறி இருந்தார். இருப்பினும் இந்த உழைப்புதான் அவரை முன்னணி கதாநாயகியாக இருக்கவைப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.