Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நவோதயா பள்ளிகள்” இல்லாதது ஏன்….? திமுகவிடம் கேள்வி எழுப்புங்கள்…. மத்திய அரசு கோரிக்கை….!!!!!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்ஐடி போன்றவற்றை ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தின் கல்வி திறன் குறித்த எங்களுடைய கவனத்தில் தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது. அதன் பிறகு தேசிய கல்வியில் மாணவர்களின் பட்டப் படிப்பு, விளையாட்டு திறன் போன்ற பல செயல்பாடுகள் இருக்கிறது.

அரசின் கொள்கையின்படி கண்டிப்பாக அனைத்து மாநிலங்களிலும் ஒரு நவோதயா பள்ளி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஒரு பள்ளிக்கூட இல்லை. இது தொடர்பாக மாநில அரசிடம்  பொதுமக்கள் கேள்வி எழுப்ப  வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு கூறியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளில் நீதி மட்டுமே இருக்கிறது. இதனால் எந்த ஒரு அதிகாரிகளும் மத்திய அரசை கண்டு பயப்படவில்லை. தமிழகத்தில் பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இங்கு வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறினார்.

Categories

Tech |