கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னிலியோன் கடந்த 2012 ஆம் வருடம் முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது.
இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டிரேட் சென்டரில் இன்று மாலை 5;30 மணிக்கு நடக்க இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சன்னி லியோன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.