தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகைகள் லிஸ்டில் இல்லை. இருப்பினும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படம் அவர் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பேரை பெற்று தந்தது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமான போது கிண்டல் அடித்தவர்கள் கூட படத்தை பார்த்தபோது பாராட்டினார்கள். இந்த படம் மூலம் த்ரிஷாவின் மார்க்கெட் நிலவரம் மேலும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திரிஷா நடித்து கடந்த சில வருடங்களாக வெளிவராமல் முடங்கிப் போய் உள்ள அவருடைய படங்கள் எப்படியாவது மீண்டும் வருமா என்ற கோலிவூட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. இவற்றில் ராங்கி படம் இன்னும் வெளிவராமல் இருப்பதால் ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்துள்ளது. எங்கே எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் ராங்கி படத்தை இயக்கியுள்ளார். மேலும் ராங்கி படத்தின் டீசர் மற்றும் கர்ஜனை படத்தின் டிரைலர் வெளியாக 3 வருடங்களும், சதுரங்க வேட்டை 2 டீசர் வெளியாகி 5வருடங்களும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.