தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவை காரைக்காலில் இன்று முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை அனேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.