Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் போலீசார் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் குடிசை முற்றிலுமாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |