Categories
தேசிய செய்திகள்

“வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வங்கி நிர்வாகம் தனியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பதில்லை.

இது போன்ற நடவடிக்கைகளில் கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சோனாலி வங்கி, பெடரல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா பேங்க் போன்றவைகள் ஈடுபட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய பணியாளர்கள் வருகிற 19-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |