ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள் துருக்கி வழியாக நடந்து கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
துருக்கி எல்லையில் தங்குவதற்கு இடமில்லாமல், சாலையோரத்தில் ஆங்காங்கே படுத்து தூங்கிகொண்டு அவர்கள் பயணம் செய்யும் காட்சிகள் வெளிவந்துள்ளன.