இந்த மாதம் நவம்பர்-1ம் தேதியில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம்.
# வணிக கேஸ்சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய்.115.50 குறைத்துள்ளது.
# அதன்பின் ஏவியேஷன் டர்பைன் எரிப்பொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் விமானடிக்கெட் விலை அதிகரிக்கலாம்.
# கேஸ் சிலிண்டர்களை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு உங்களுக்கு ஒரு முறை கடவுச் சொல் (OTP) தேவைப்படும். சிலிண்டரை முன் பதிவு செய்தபின், வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இதனை கூறிய பிறகே சிலிண்டரை பெற முடியும்.
# ஐஆர்டிஏவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நவம்பர் 1 முதல் காப்பீட்டாளர்கள் KYC விபரங்களை வழங்குவது அவசியமாகி விட்டது.
# நவம்பர் முதல் 5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ள வரிசெலுத்துவோர், ஜிஎஸ்டி ரிட்டனில் 5 இலக்க HSN குறியீட்டை உள்ளிடவேண்டும்.
# டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார மானியம் குறித்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்கீழ், மின் மானியத்திற்கு பதிவுசெய்யாத மக்களுக்கு அதன் பலன் கிடைக்காது.
# நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து ரயில்களின் கால அட்டவணையையும் இந்திய ரயில்வே மாற்றி இருக்கிறது. அத்தகைய நிலையில் வீட்டைவிட்டு வெளியேறும் முன் முழுமையான பட்டியலைச் சரிபார்ப்பதுக்கொள்ளவும்.