Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் தவிக்கும் இலங்கை பெண்” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு…!!!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி செய்தபோது சிலர் 5 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி வானதி நகைகளை விட்டு அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வானதி சொந்த நாட்டுக்கு செல்ல தேவையான உதவிகளை செய்து தருமாறு மனு அளித்துள்ளார். இதனை அடுத்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மைய அதிகாரி மகேஷை வானதி நேரில் சந்தித்தார். அப்போது நீங்கள் சுற்றுலா விசாவில் வந்துள்ளீர்கள். நாங்கள் அகதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம். இப்போது எங்களால் உங்களுக்கு உதவ முடியாது என தெரிவித்தனர்.

இதனால் வானதி கண்ணீருடன் நிருபர்களிடம் கூறியதாவது, எனது சொந்த நாட்டிற்கு செல்ல கடந்த 6 மாதமாக முயற்சித்து வருகிறேன். இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினால் தான் அங்கு செல்ல முடியும் என தெரிவித்தனர். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை. சிலரிடம் உதவி கேட்டுள்ளேன். தனியாக தவிக்கும் எனது குழந்தைகளை பார்க்க அரசு உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |