தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகள் ஏதேனும் வந்தால் 044-25619208, 044-25619207, 044-25619206, 1913 போன்ற தொலைபேசியில் நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
அதன் பிறகு சென்னையில் உள்ள எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது முதல்வர் மழை பாதிப்பு குறித்த புகார்களை கேட்டறிந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் வடசென்னை பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது தொடர்பான தகவல்கள் உங்களுடைய கவனத்திற்கு வந்ததா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
அதன் பிறகு கடந்த வருடத்தை போன்று நடப்பாண்டில் அந்த அளவுக்கு தண்ணீர் பல இடங்களில் தேங்கவில்லை என செய்தியாளர்கள் கூறினார். அதற்கு முதல்வர் அதை நான் சொல்ல சொல்லக்கூடாது. நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார். இதனையடுத்து தி. நகர் போன்ற பகுதிகளில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை எப்போது சரி செய்வீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் கடந்த 10 வருடங்களாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்கள் சீரழிக்கப்பட்டது. அதை 1 1/2 வருடங்களில் சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.