Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் உயிரிழப்பு… வருவாய் துறை அமைச்சர் இழப்பீடு அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் வியாசர்பாடியில், மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ டிரைவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை பருவ மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின தயார் நிலையில் இருக்கின்றனர். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வடசென்னை தாழ்வான பகுதி என்ற காரணத்தினால் வழக்கமான மழை பாதிப்புகள் இருக்கிறது. மேலும் நீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து எந்த இடங்களில் பிரச்சினை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி அதை சரி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |